பாகிஸ்தான் அதிபர் தேர்தல்: பெனாசிர் பூட்டோவின் வாரிசுகள் போட்டி

பாகிஸ்தான் அதிபர் தேர்தல்: பெனாசிர் பூட்டோவின் வாரிசுகள் போட்டி

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் பெனாசிரின் மகன் மற்றும் மகள் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ, மகள் ஆசியா பூட்டோ ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் லர்கானா என்.ஏ-200 மற்றும் லியாரி என்.ஏ-246 ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் பெனாசிரின் மகள் ஆசியா பி.எஸ்.-10 ரத்தோ- டாரோ தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும், அந்த தொகுதிக்கான வேட்பு மனுக்களை அவர் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் வரும் 8-ந்தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply