உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களின் மனதை கொள்ளையடித்த சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், வரும் 2017ஆம் ஆண்டிற்குள் தனது 80 சதவிகித பயனாளர்களை இழக்கும் என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் முதலிடம் வகிக்கும் ஃபேஸ்புக் குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில மாதங்களாக ஆராய்ச்சி செய்து வந்தனர். இணையம் பயன்படுத்தும் மக்களிடையே ஃபேஸ்புக் பயன்படுத்துவது ஒரு தொற்றுநோய் போல பரவியுள்ளது என்றும் அதனால் தற்போதே ஃபேஸ்புக்கை விட்டு பொதுமக்கள் விலக ஆரம்பித்து வருவதாகவும் இந்த ஆராய்ச்சி கூறியுள்ளது. இது தொடர்ந்து கொண்டே போனால் வரும் 2017ஆம் ஆண்டிற்குள் சுமார் 80 சதவிகித பயனாளர்களை ஃபேஸ்புக் இழக்கும் என்று அந்த ஆராய்ச்சியின் முடிவு கூறுகிறது.
ஆனால் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தனது 10வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் ஃபேஸ்புக், இந்த ஆராய்ச்சி முடிவு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் உலகின் நம்பர் 1 சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் திகழ்ந்து வருகிறது என்பதுதான் உண்மை.