மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் பப்பாளியை சாப்பிட்டால், உடலின் ஈஸ்ட்ரோஜென்னானது தூண்டப்பட்டு, உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். இப்படி உடலின் வெப்பநிலை சீராக இருந்தால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.
செரிமானத்தை மேம்படுத்தும் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பப்பாளியை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்.
மலச்சிக்கலை தடுக்கும் வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். அப்படி நீங்கள் திடீரென்று மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால், பப்பாளி சாப்பிடுங்கள். அதில் உள்ள நார்ச்சத்தினால் உடனே மலச்சிக்கல் குணமாகும்.
இதய பிரச்சனைகள் பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருப்பதால், இதனை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக பிரச்சனையின்றி இருக்கும்.
கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோ பாப்பைன் இருப்பதால், இவை உடலில் உள்ள உட்காயங்களை குறைக்கும். இதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
எடையை குறைக்கும் பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், இதனை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.