ஆரஞ்சு பழத் தோலின் அசத்தலான நன்மைகள்

orange_peels_002

ஆரஞ்சு பழம் மட்டுமின்றி அதன் தோலில் பல வியக்கவைக்கும் நன்மைகள் அடங்கியுள்ளன.

ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

மேலும் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

கொழுப்பை குறைக்கும்

ஆரஞ்சு பழத் தோல் உடலிலுள்ள LDL அல்லது ‘மோசமான’ கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும்.

எனவே உணவில் ஆரஞ்சு பழத் தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கலாம்.

நெஞ்செரிச்சல்

ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு விடை காணலாம்.

சுவாசம் மற்றும் வயிறு பிரச்னைகள்

100 கிராம் ஆரஞ்சுப் பழத் தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன.

எனவே மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது.

ஆரஞ்சுப் பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.

மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சளி, ப்ளூ ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பளபளக்கும் பற்கள்

ஆரஞ்சு பழத் தோலை பசையாகவோ அல்லது நேரடியாகவோ பற்களில் தேய்த்தால் பளிச்சென்று மாறும்.

அதுமட்டுமின்றி இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் ஏற்படும் கூச்சத்தையும் சரிசெய்யலாம்.

சருமத்திற்கு

ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தடவினால், தோல் பகுதி மென்மையாகும், கருப்பான கறைகள் மறையும்.

இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.

Leave a Reply