வட இந்தியாவில் புகழ்பெற்ற என்.டி.டி.வி நிறுவனமும், ஹன்சா ரிசர்ச் நிறுவனமும் இணைந்து எடுத்த சிறந்த முதல்வர்களின் கருத்துக்கணிப்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முதலிடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் 12 வது இடத்தில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்புக்காக மொத்தம் 16 முதல்வர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லாலு பிரச்சாத் யாதவ்வின் ஆட்சியில் பின் தங்கியிருந்த மாநிலத்தை தனது நிர்வாகத்திறமையால் சரிசெய்து கொண்டு வந்த நிதீஷ்குமாரின் திறமை காரணமாக அவர் முதலிடத்தை பெற்றுள்ளதாக சர்வே கூறுகிறது. இந்த பட்டியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 4வது இடத்திலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 10வது இடத்திலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா 12வது இடத்திலும் இருக்கின்றார். கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடைசி இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த முதல்வர்கள் பட்டியல்:
1. நிதீஷ்குமார் பீகார்
2. சிவ்ராஜ் ஷெளகான் மத்திய பிரதேசம்
3. ராமன் சிங் சட்டீஸ்கர்
4. நவீன் பட்நாயக் ஒடிஷ்ஷா
5. நரேந்திரமோடி குஜராத்
6. வசுந்தரா ராஜே ராஜஸ்தான்
7. ஹெமென்ந்த் சோரன் ஜார்கண்ட்
8. அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசம்
9. பூபிந்தர் ஹொடா ஹரியானா
10. மம்தா பானர்ஜி மேற்கு வங்காளம்
11. பிரித்விராஜ் சவான் மகாராஷ்டிரா
12. ஜெயலலிதா தமிழ்நாடு
13. சித்தராமையா கர்நாடகம்
14. பிரகாஷ் ஃபாதல் பஞ்சாப்
15. தரூண் கோகி அஸ்ஸாம்
16. உம்மன்சாண்டி கேரளா