கங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும். ஆய்வு அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்

5 கங்கை நதியை தூய்மைப்படுத்த தனி அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்தி பிரதமர் நரேந்திரமோடி தீவிர நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் கங்கை நதியில் குளித்தால் புற்றுநோய் ஏற்படும் என ஆய்வு அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளதால் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் இயங்கி வரும் அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற மாபெரும் திருவிழாவான கும்பமேளாத் திருவிழாவின்போது கங்கை நதியின் நீரை சேகரித்து ஆய்வு செய்தது. ஆய்வு முடிவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் கங்கை நதியின் நீரில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

5aஅதுமட்டுமின்றி பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த தண்ணீரில் நச்சுத்தன்மை கொண்ட குரோமியம் அதிகளவில் கலந்திருந்ததாகவும், என்.சி.சி.எம். தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் அதிர்ச்சியுடன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அதிகளவில் காணப்படும் இந்த குரோமியம் புற்றுநோய் உட்பட பல நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நச்சுத்தன்மைக்கு கான்பூரில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலையின் கழிவுநீர் கங்கையில் கலப்பதுவே முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. கங்கை நதிநீரின் இந்த ஆய்வால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply