நாட்டின் முதல் BH வாகன பதிவு எண் விநியோகம் தொடங்கியது!

வாகன உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து விதியின்படி அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு வாகன பதிவு மாற்றம் செய்ய வேண்டும்

இதில் உள்ள நடைமுறை சிக்கலை தீர்க்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் புதிய பாரத் வரிசை பதிவு எண் என்பது அறிமுகம் செய்தது

இதன்படி மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் தங்கள் வாகனத்திற்கு பாரத் சீரியஸ் என்ற தொடங்கும் பதிவு எண்ணை பெற்று கொள்ளலாம்

பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த பாரத் சீரிஸ் எண்ணை பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.