பகவத் கீதையும் நம் ஆன்மீகமும்.

vishswarupa

ஆன்மீக பாதையில் செல்கின்றேன் என்று சொல்பவர்கள் இந்த மூன்று கேள்விகளை கேட்டு கொள்ளுங்கள், நீங்கள் எந்த நிலையில் உள்ளீர் என்ற விடை கண்டு உங்கள் ஆன்மீகபயணத்தை தொடருங்கள் அல்லது தொடங்குங்கள்.

1) கேள்வி : உங்களுக்கு சோதனை அல்லது துயரம் அல்லது கஷ்டம் வந்தால் நீங்கள் மற்றவரை அல்லது அது சரியில்லை, இது சரியில்லை, சூழ்நிலை சரியில்லை என்று சொல்வீர்களா?

விடை : உங்கள் உண்மையான மனசாட்சி ஆமாம் என்று சொன்னால் நீங்கள் இன்னும் ஆன்மீக பயணத்தை, பயிற்சியினை ஆரம்பிக்கவே இல்லை. நான் ஆன்மீக பாதையில் செல்கின்றேன் என்று சொல்வது, நீங்கள் உங்களையே ஏமாற்றி கொண்டு வாழ்கிறீர்கள். உடனே மாற முயற்சி செய்யவும்.

2) கேள்வி : உங்களுக்கு சோதனை அல்லது துயரம் அல்லது கஷ்டம் வந்தால் உங்களை குறை சொல்லி கொள்வீரா?

விடை : பரவாயில்லை, நீங்கள் ஆன்மீக பயிற்சியினை தொடங்கிவிட்டிர்கள்.

3) உங்களுக்கு சோதனை அல்லது துயரம் அல்லது கஷ்டம் வந்தால் உங்களை, சூழ்நிலை , மற்றவரை ,எதையும் குறை சொல்லவில்லை.

விடை : உங்கள் ஆன்மீக பயிற்சி முடிந்துவிட்டது.

உங்கள் மனமும் , இந்திரியங்களும் இந்த கலியுகத்தில் அடக்குவது மிகவும் சிரமம். பகவானின் கூர்ம அவதாரத்தினை (ஆமை ) வடிவமாக வந்ததை நினவில் நிறுத்தி பிரார்த்திப்போம்
எந்த முறையில் ஆமை தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஓட்டிற்குள் இழுத்து கொள்கிறதோ, நாமும் உலகியல் கெட்ட விஷயத்திலிருந்து நம் கண், காது, மூக்கு,வாய், மனம், உணர்சிகள், மற்றும் எல்லா புலன்களையும் அடக்கி ஆள வேண்டும்.

நம் எல்லா இந்திரிய்கங்களையும் இந்த சரிரத்தை ஆமை ஓடாக நினைத்து ஆமை போல் காப்போம்.

இனி திருந்தலாம், முடிந்தவரை தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு பிராயச்சித்தம் செய்வோம். அடுத்தவர்களையும் பகவான் நாமங்களை சொல்லி கரை சேர்ப்போம்.

ஸ்ரீ சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 

Leave a Reply