முதன்முறையாக விஷாலுக்கு வில்லனாகும் கே.பாக்யராஜ்

முதன்முறையாக விஷாலுக்கு வில்லனாகும் கே.பாக்யராஜ்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திச்சண்டை’ கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வரவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான மிஷ்கின் இயக்கி வரும் ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷாலுடன் வினய், பிரசன்னா, அக்சராஹாசன், அனு இமானுவேல், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் கே.பாக்யராஜ் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கே.பாக்யராஜ் கடைசியா 36 வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘விடியும் வரை காத்திரு’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply