பாரத் பே நிறுவனத்தின் நிறுவனரின் மனைவி வைத்திருந்த பங்குகள் ரத்து!

நிதி கையாடல் குற்றச்சாட்டு காரணமாக பாரத் பே நிறுவனத்தின் நிறுவனரின் மனைவி வைத்திருக்கும் பங்குகளையும் ரத்து செய்வதாக பாரத் பே நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நிதி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கிவரும் பாரத் பே நிறுவனரின் மனைவி நிதி கையாடல் செய்ததாக கூறப்பட்டது.

இவர் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை கையாடல் செய்து தனக்கு அழகு சாதன பொருட்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுத்த பாரத் பே நிர்வாகம், அவர் வைத்திருக்கும் பங்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.