கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்ப்போது அந்த மனுவை எதிர்ப்பேன் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதனால் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும், ஜாமீன் கேட்டும் ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது அதை எதிர்ப்பேன் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்துள்ளார்.