மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் மணமேடையில் மணமகளை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்ய முயன்ற ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போபால் லால்கட்டி என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை குழந்தைகள் மருத்துவர் ஜெயஸ்ரீ என்ற பெண்ணுக்கும் ரோஹித் நாம்தேவ் என்பவருக்கு திருமண சடங்குகள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து வந்தது. மணமக்களை வரிசையாக நின்று வாழ்த்து தெரிவித்தவண்ணம் உறவினர்கள் இருந்தவர்கள். அந்த சமயத்தில் வரிசையில் நின்றிருந்த ஒருவர் திடீரென மறைந்த்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணமகளின் மார்பில் சுட்டு கொலை செய்தார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தபோது அவரை அருகில் இருந்தவர்கள் பிடித்து உதைத்தனர். பின்னர் அவர் காவல்துறையினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் நடந்த விசாரணையில் மணமகளை சுட்டுக்கொலை செய்தவர் அனுராக் என்றும், அவர் ஜெயஸ்ரீயை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனதால் அவரை கொலை செய்ததாகவும் தெரியவந்தது.
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகள் கொல்லப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.