ஓவியாவுக்கு மாற்றாக ஒரு ஐட்டம் டான்ஸ் நடிகையா?

ஓவியாவுக்கு மாற்றாக ஒரு ஐட்டம் டான்ஸ் நடிகையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதன் நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் டிவி இதுவரை பிந்துமாதவி, சுஜா வருனே மற்றும் ஹரிஷ் கல்யாண் என மூன்று பேர்களை இறக்கிவிட்டுள்ளது. ஆனால் யானை முன் நின்ற எலி மாதிரி ஓவியாவின் ஒரே ஒரு புன்னகைக்கு இவர்கள் ஈடில்லை என்ற உண்மை தற்போதுதான் சேனல் நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மேலும் ஒரு பங்கேற்பாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவர்தான் காஜல் பசுபதி என்ற நடிகை. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே ஆகவும், ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் இன்று முதல் பிக்பாஸ் வீட்டில் தங்குகிறார். இதுகுறித்த புரமோ வீடியோ ஒன்று விஜய் டிவியின் டுவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சுஜா வருணே, காஜல் பசுபதி என வரிசையாக ஐட்டம் டான்ஸ் நடிகையாக இறக்குமதி செய்து ஓவியாவுக்கு பதிலாக ஈடுகட்டிவிடலாம் என்ற நினைப்பது பலிக்காது என்று ஓவியா ஆர்மியினர் கூறி வருகின்றனர்.

 

 

Leave a Reply