அராஜகத்தின் உச்சகட்டமாக செல்லும் பிக்பாஸ்: உக்கிரத்தில் ஐஸ்வர்யா

அராஜகத்தின் உச்சகட்டமாக செல்லும் பிக்பாஸ்: உக்கிரத்தில் ஐஸ்வர்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியை பெண்கள், குழந்தைகள் பார்க்கின்றனர் என்ற அறிவு கூட இல்லாமல் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி அராஜகத்தின் உச்சகட்டமாக இருந்ததால் பார்வையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பிக்பாஸ் வேண்டுமென்றே ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிகிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒருசிலர் மீது பழிவாங்கும் நோக்கத்தில் உள்ள ஐஸ்வர்யாவுக்கு டாஸ்க் என்ற பெயரில் சர்வாதிகார ராணி பதவியை கொடுத்தார் பிக்பாஸ்

ராணி பதவி கிடைத்த மமதையில் ஐஸ்வர்யா செய்த அட்டகாசங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பாலாஜியை அதிகபட்சமாக அவமரியாதை செய்த ஐஸ்வர்யா, இனிமேல் தமிழ் படங்களில் மட்டுமின்றி தமிழகத்திலேயே இருக்க முடியாது. ஜூலி, காயத்ரி ஆகியோர்கள் நல்லவர்கள் என்ற அளவில் இருந்தது ஐஸ்வர்யாவின் அட்டாகாசம். பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான மரியாதையே போய்விட்டது. கமல்ஹாசன் உண்மையிலேயே நல்லவர் என்றால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிடுவது நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Leave a Reply