பிக்பாஸ் புகழ் சுஜா வருணி திருமணம் எப்போது?
பிக்பாஸ் 1 சீசனின் போட்டியாளரும் நடிகையுமான சுஜா, சிவாஜிகணேசன் பேரனை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இவர்களது திருமணம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது
இதுகுறித்து சுஜா கூறியதாவது: எனக்கும் சிவகுமார் என்பவருக்கும் நவம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிவகுமாரை திருமணம் செய்துகொள்ள நான் அதிர்ஷ்டம் செய்தவள் என்றுதான் கூற வேண்டும்
சுஜாவின் வருங்கால கணவர் சிவாஜி தேவ் தனது பெயரை சிவக்குமார் என மாற்றம் செய்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.