பீகாரில் ஆட்டோ மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து. ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பலி.

bihar auto train accidentபீகார் மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆட்டோ மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள கிழக்கு சம்பரன் மாவட்டத்தின் சின்னாயூதா என்ற கிராமத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த ரயில்வே கேட்டை இன்று காலை கடக்க முயன்ற ஆட்டோ ஒன்றின் மீது, அந்த வழியாக வந்த டேராடூன் ரப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆட்டோ  சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தூக்கி வீசப்பட்டது.

இந்த பயங்கரமான விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களில் 8 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களில் 8 பேர்களின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து காணப்படுகிறது. அவர்கள் அணிந்திருந்த உடையை வைத்துதான் உறவினர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர்  மோதிகரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடுமத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply