தமிழக அரசியல் கட்சிகளை பின்பற்றும் பீஹார் பாஜக?

தமிழக அரசியல் கட்சிகளை பின்பற்றும் பீஹார் பாஜக?
bihar
தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை பாரதிய ஜனதா கட்சி, பிஹார் தேர்தலில் பயன்படுத்தி வருகிறது. பீகார் தேர்தலை ஒட்டி பாஜக நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு லேப்டாப், இளம்பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தலித்களுக்கு டிவி, இலவச வேட்டி, சேலைகள் போன்ற பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இலவச டிவி, லேப்டாப், சைக்கிள், மிக்சி, ஃபேன் போன்ற பல பொருட்களை முந்தைய, தற்போதைய அரசுகள் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாஜகவின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிஹார் மாநிலத்தை பின்தங்கிய நிலையிலிருந்து மீட்டெடுப்பதுதான் பாஜகவின் இலக்கு. பாஜக ஆட்சியிலிருக்கும் மத்தியப்பிர தேசத்தைப் போலவே பிஹார் மாநிலத்தையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

மெகா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகியவை சந்தர்ப்பவாத கட்சிகள். அரசியல் நிலைத்தன்மை என்ற நல்லொழுக் கம் அவர்களிடம் இல்லை. அந்தக் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால் பிஹாரை காட்டாட்சியில் தள்ளிவிடுவார்கள், அதைத் தவிர வேறு முடிவுகளே இருக்காது.

ராம்மோகன் மாளவியாவைப் பின்பற்றுபவர்கள் எப்படி காங்கிரஸில் இணைந்து செயல் பட முடியும். இதுபோன்ற அரசியல் நிலையற்ற தன்மையும், முரண்பாடுகளும் அந்தக் கூட்டணியில் உள்ளது. மூன்று காலில் ஓடப்படும் பந்தயம் முடிவுறாது, அதில் வெல்லவும் முடியாது.

காட்டாட்சியை உருவாக்கியவர் களுடன் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்துள்ளார். கடந்த மூன்று முறை அவர் பிஹாரில் வெற்றி பெற்றிருந்தாலும் காட்டாட்சியிலிருந்து பிஹாரை அவரால் விடுவிக்க முடியவில்லை. லாலு பிரசாத்துடன் அவர் இணைந்திருப் பதால் எதுவும் மாறிவிடப்போவ தில்லை. ராஷ்ட்ரீய ஜனதாதளத் தால் வளர்ச்சி தொடர்பான பிரச்சினையில் வெற்றி பெற முடியாது. எனவேதான் இடஒதுக்கீடு போன்ற மற்ற பிரச்சினைகளைக் கையில் எடுத்து சமூகத்தை பிளவுபடுத்தப் பார்க்கிறது.

பாஜகவின் தொலைநோக்கு ஆவணம், இம்மாநிலத்தின் சாலை, உள்கட்டமைப்பு, வேளாண்மை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மேம்பாடுகளைப் பற்றியது. மத்திய அரசும் பிஹாரை முன்னேற்ற உதவி புரியும். பாஜக ஆட்சியைப் பிடித்தால் பிஹார் தனது வரலாற்றை மீண்டும் எழுதும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பிஹார் பாஜக மேலிட பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் உட்பட கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply