மாநில நலனை புறக்கணித்துவிட்டு சுயநலமாக செயல்பட்டு வரும் பீகாரை சேர்ந்த ஏழு மத்திய அமைச்சர்களும் பீகார் மாநிலத்திற்குள் நுழையக்கூடாது என பீகார் மாநில முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுளது.
நேற்று பீகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜிதன்ராம், ‘பீகார் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை ஏழு மத்திய அமைச்சர்களும் போராடி கொண்டு வரவேண்டும். இவற்றை செய்ய தவறினால் ஏழு மத்திய அமைச்சர்களையும் பீகார் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.
மேலும் எனது கடின உழைப்பு காரணமாக முதல்வர் பதவியை அடைந்துள்ளேன். இதேபோல் ஒருநாள் நிச்சயம் பிரதமர் பதவியையும் பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.
பீகார் முதல்வரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.