பீகார் முதல்வர் திடீர் ராஜினாமா. மீண்டும் முதல்வராகிறார் நிதீஷ்குமார்.

jitan ram minjiபீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி சந்திப்பார் என்று பீகார் அரசியல் வட்டாரம் பரபரப்புடன் எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே அவர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பீகார் முதல்வர்தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று, நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகியதால் புதிய முதல்வராக அவருடைய தீவிர ஆதரவாளரான ஜிதன் ராம் மாஞ்சி, கடந்த மே மாதம் 20 தேதி முதல்வரானார். ஆனால் முதல்வர் பதவியை ஏற்றவுடன் தனக்கு பதவியை விட்டுக்கொடுத்த  நிதிஷ் குமாருக்கு எதிராக அவர் செயல்பட்டு வந்ததாக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐக்கிய ஜனதாதளம், முதல்வர் மாஞ்சியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியது. அவருக்கு ஆதரவு அளித்து வந்த அமைச்சர்கள் நரேந்திரசிங், பிரிஷன் படேல், சாஹித் அலிகான், சம்ரத் சவுத்ரி, நிதிஷ் மிஷ்ரா, மகாசந்திர பிரசாத் சிங், பீம்சிங் ஆகியோர்களும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுஅதன்மீது ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக  முதல்வர் மாஞ்சி தனது பதவியை இன்று திடீரென செய்தார். தனது ராஜினாமா கடித்தை ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக பீகாரில் நடந்து வந்த அரசியல் குழப்பத்திற்கு தற்போது  முடிவு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பெரும்பான்மையுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் பீகார் புதிய முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply