குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையில் சிக்கி தவிக்கின்றது. இந்த உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ரசாயனம் கலந்து இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதால் மேகி நூடுல்ஸ்ஸை உ.பி. அரசு அதிரடியாக தடை விதித்தது. இதையடுத்து மற்ற மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸை தடை விதிக்க ஆலோசனை செய்து வருகின்றது.
இந்நிலையில் இந்த உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு பீகார் மாநில கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட மூன்று சினிமா பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உ.பி.நீதிமன்றாத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அமிதாப், மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா மீதும், நெஸ்லே நிறுவன அதிகாரிகள் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு