100 மணி நேரத்தில் 11 ஆயிரம் கழிப்பறைகள்: பீகாரில் சாதனை

100 மணி நேரத்தில் 11 ஆயிரம் கழிப்பறைகள்: பீகாரில் சாதனை

பாரத பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் 100 மணி நேரத்தில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டி சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கோபல்கஞ்ச் என்ற மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகிகளின் சீரிய முயற்சியால் 100 மணி நேரத்தில் மொத்தம் 11,244 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு அவை மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கபப்ட்டுள்ளன. இது இந்திய அளவில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 100 மணி நேரத்தில் 10,449 கழிப்பறைகள் கட்டியதே இந்திய அளவில் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஏற்படுத்திய நிர்வாகிகள், அதிகாரிகள் அனைவருக்கும் கோபல்கஞ்ச் மாவட்ட நீதிபதி ராகுல்குமார் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply