பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
கிட்டத்தட்ட ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த பாஜக கூட்டணி, கடைசியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது
பாஜக ஐக்கிய ஜனதாதள கூட்டணியில் 125 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களிலும் வெற்றி பெற்றது
இதனை அடுத்து நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்கிறார் அவரது தலைமையில் விரைவில் புதிய ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பெரும் எதிர்பார்ப்பில் இருந்த லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி முதல்வர் பதவியை நூலிழையில் கோட்டை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது