ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் மூலம் உத்தரவு இட பீகார் காவல்துறை அதிரடி முடிவு

ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் மூலம் உத்தரவு இட பீகார் காவல்துறை அதிரடி முடிவு

facebookதற்கால விஞ்ஞான உலகில் அனைத்து அலுவலகங்களும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில் பீகார் காவல்துறையும் வாட்ஸ் அப், இ-மெயில், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் பீகார் காவல்துறை நவீனமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்டமாக பீகார் மாநில காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட்போன்’களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பீகார் மாநில ஐஜி பங்கஜ் தரத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘ காவல்துறாஇ கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநிலம் தழுவிய அளவில் ஒருவருக்கொருவர் விரைவாக தகவல்களை பரிமாறி ஒருங்கிணைந்து பணியாற்ற முடியும்.

ஏற்கெனவே 1,390 ஸ்மார்ட் போன்கள் போலீஸ் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளுக்காக வாங்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. தலா ரூ.15,000 மதிப்புள்ள இந்த போன்களில் 940 போன்கள் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருபவர்களுக்கும், எஞ்சிய போன்கள் எஸ்பி, டிஜஜி, ஐஜி, ஏடிஜி மற்றும் டிஜிபி போன்று உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக மாநில அரசு மொத்தம் ரூ.2.08 கோடி ஒதுக்கியுள்ளது’’ என்று கூறினார்.

மேலும் ஸ்மார்ட் போன்களில் உடனடியாக வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆப்ஸ்கள் வழியாக உயரதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply