சோலார் பேனல் ஊழல். பெண் தொழிலதிபர் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் ஜெயில்
கேரளாவையே புரட்டி போட்ட சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம் குற்றம்சாட்டப்பட்ட பெண் தொழிலதிபர் சரிதா நாயர் மற்றும் அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் பெரம்பாவூர் ஜுடிசியல் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் வதித்து இன்று அதிரடியாக தீர்ப்பளித்தது.
சோலார் பேனல் ஊழல் குற்றச்சாட்டில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்தக் குற்றச்சாட்டில் சரிதா மற்றும் பிஜூ ராதாகிருத்ணன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக நிரூபணம் ஆகியுள்ளதால் நீதிமன்றம் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.
மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நடிகர் ஷாலு மேனன், அவருடைய தாய், மற்றும் டீம் சோலார் ஊழியர் ஆகியோர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.