தந்தையின் இறப்பு சான்றிதழ் வேண்டும். பின்லேடனின் மகன் அமெரிக்காவிடம் கோரிக்கை.

bin ladenசமீபத்தில் அல்கொய்தா இயக்கம் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் ஒருவர் பின்லேடனை பாகிஸ்தான் அமெரிக்காவிடம் உயிருடன் ஒப்படைத்தது என்றும் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது வெறும் நாடகம் என்று கூறியதை அடுத்து தனது தந்தையின் இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் பின்லேடனின் மகன் கோரியுயுள்ளதாக  விக்கிலீக்ஸ் நிறுவனம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் 110 மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி தீவிரவாத  தாக்குதல் நடத்திய அல்கொய்தா இயக்கத்தையும், அதன் தலைவர் பின்லேடனையும் அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011 ஆம்  ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, “ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்” என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டு கொன்றது. பின்னர் பின்லேடனின் உடல் கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில், ஒசாமா பின்லேடன் மகன் தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு ரியாத்துக்கான அமெரிக்க தூதருருக்கு கடிதம் எழுதியதை விக்கீலிக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.  பின்லேடன் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து  எழுதப்பட்ட இந்த கடிதத்தில் பின்லேடனின் இறப்பு சான்றிதழ் கேட்டு அவரது மகன் அப்துல்லா பின்லேடன் கடிதம் எழுதியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதர் கிளென் கீஸர், உங்கள் தந்தை ஓசாமா பின்லேடன் இறப்பு சான்றிதழ் கேட்டு நீங்கள் அனுப்பியிருந்த கடிதம் எனக்கு கிடைத்தது. அமெரிக்க வெளியுறவு துறையின் சட்ட  நிபுணர்கள் இது போன்ற ஆவணங்களை கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். ராணுவ நடவடிக்கையில் நடைபெறும் இதுபோன்ற  தனிநபர் கொலைகளுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடியாது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பின்லேடன் கொல்லப்பட்டதால் அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் கைவிடப்பட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்திய  நீதிமன்ற ஆவணங்களை பின்லேடன் மகனுக்கு அனுப்பியுள்ள அமெரிக்க தூதர், இந்த ஆவணங்கள் உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply