முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஒரே மகள் Chelsea Clinton தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்று நியூயார்க்கில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட Chelsea Clinton, தான் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாகவும், இந்த வருட இறுதியில் தான் ஒரு அம்மாவாக மாற இருப்பதாகவும் தெரிவித்தார். கிளிண்டன் மற்றும் ஹிலாரி ஆகியோர் தங்களுடைய பேரக்குழந்தையை மிகவும் விரும்பி வரவேற்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தான் ஒரு சிறந்த அம்மாவாக இருக்க விரும்புவதாகவும், ஆண் அல்லது பெண் என எந்த குழந்தையாக இருந்தாலும், அந்த குழந்தையை மிகவும் பொறுப்புடன், பெண்களை மதிக்கக்கூடிய ஒரு நல்ல மனிதனாக வளர்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
Chelsea Clinton கடந்த 2010ஆம் ஆண்டு Marc Mezvinsky என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.