ஜெய்ப்பூர் பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்

bill clintonஆசிய மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும்  முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இன்று இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வருகை புரிந்தார். ஜெய்ப்பூரில் மதிய உணவை தயாரித்து வழங்கும் தொண்டு நிறுவனத்தின் சமையல் கூடத்தை பார்வையிட்ட பில் கிளிண்டன் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவை பரிமாறினார்.

நேற்று அமெரிக்காவில் இருந்து கிளம்பிய பில்கிளிண்டன் இன்று காலை இந்தியா வந்தார். நேராக ஜெய்ப்பூர் சென்ற அவர், அங்கு இயங்கும் அக்சய பாத்ரா என்ற தொண்டு நிறுவனத்தின் சமையல் கூடத்தில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு எவ்வாறு மதிய உணவு தயாரிக்கப்படுகிறது என்பதை  நேரில் பார்வையிட்டார்.

 பிறகு அந்த உணவை சாப்பிடும் அரசு பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறை ஏதாவது உள்ளதா என கேட்டறிந்தார். கிளிண்டன் மற்றும் அவருடன் வந்துள்ள குழுவினர், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை பரிமாறினர். ஜெய்ப்பூரை அடுத்து நாளை கிளிண்டன் லக்னோ செல்லவிருக்கிறார். அதன்பின்னர் அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply