தமிழக மாணவ, மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி; செங்கோட்டையன்
தமிழக கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழக கல்வித்துறையில் அவ்வப்போது அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பாடதிட்டங்கள் மாற்றியதில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ, மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் சுமார் 100 மையங்களில் 75,000 மாணவர்களுக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பயிற்சியும் போட்டி தேர்வுகளும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்
மேலும் கடந்த ஆண்டு மடிக்கணினிகள் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வரும் 2018 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்