ஆஸ்திரேலியாவில் அதிசயம். திடீரென நிறம் மாறிய நதி.

[carousel ids=”64322,64323,64324,64325,64326,64327,64328,64329″]

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நதியில் உள்ள தண்ணீர் திடீரென நீல நிறமாக மாறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் நிறமாற்றத்திற்கான காரணம் என்ன என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மானியா மாகாணத்தில் உள்ள டெர்வெண்ட் என்ற நதிக்கரைக்கு சுற்றுலாப்பயணிகள் அடிக்கடி செல்லும் வழக்கம் உண்டு. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இரவு வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் நதியின் அழகை ரசித்து கொண்டிருந்தபோது திடீரென நதிக்கரையில் உள்ள தண்ணீர் மட்டும் நீல நிறத்தில் மாறியதை கண்டு அதிசயத்தனர். இந்த மாற்றத்தை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பலர் புகைப்படமும், வீடியோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். சிறிது நேரத்தில் நதி நார்மலாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நதியின் தண்ணீர் திடீரென நிறம் மாறியதற்கு என்ன காரணம்? என்பதை அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும், இதனால் நதியில் வாழும் உயிரினங்களுக்கும், நதிக்கரையில் வாழும் பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply