பாஜக – தேமுதிக கூட்டணி முடிவானது. பாமக, மதிமுக அதிருப்தி.

vijayakanth and modi

 

பாரதிய ஜனதா கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக சேருவது உறுதியாகிவிட்டது. அந்த கட்சிக்கு கூட்டணியில் 14 தொகுதிகள் கொடுக்க பாரதிய ஜனதா ஒப்புக்கொண்டுள்ளது.

பாரதிய ஜனதா கூட்டணியில் மதிமுக, பாமக, மற்றும் தேமுதிக ஆகிய பெரிய கட்சிகளும், ஐக்கிய ஜனதா தள் போன்ற சில சிறு கட்சிகளும் கூட்டணியில் சேர முடிவாகியுள்ளது.  இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகளும், பாமக, மற்றும் பாரதிய ஜனதாவுக்கு தலா 8 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீது நான்கு தொகுதிகள் சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

இந்நிலையில் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்ட பாமக தற்போதைய எட்டு தொகுதிகள் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதுபோல மதிமுகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் வைகோ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாமகவும், மதிமுகவும் கூட்டணியில் நீடிக்குமா? அல்லது வெளியேறுமா என்பது இனிமேல்தான் தெரியும்.

Leave a Reply