விஜயகாந்தின் எதிர்ப்பை மீறி ஸ்ரீரங்கம் தேர்தலில் பாஜக போட்டி. பெரும் பரபரப்பு

bjpஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில்  தே.ஜ. கூட்டணி வேட்பாளராக  பா.ஜனதா மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 13 ஆம் தேதி நடக்கிறது. அதிமுக சார்பில் வளர்மதியும், தி.மு.க. சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆனந்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் அண்ணாதுரையும் போட்டியிடுகிறார்கள்.

இதில் வளர்மதி, ஆனந்த் ஆகியோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து தேர்தல் பணியையும் தொடங்கிவிட்டனர். இதேபோல் திமுக சார்பில் 83 பேர் கொண்ட தேர்தல் பொறுப்பாளர்களும்  நியமிக்கப்பட்டு தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட உள்ளதாக அக்கட்சியினர் கூறிவந்தனர்.

ஆனால் இந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளது. நேற்று மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் விஜயகாந்தை சந்தித்துப்  பேசினார். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. ஸ்ரீரங்கம் தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு விஜயகாந்த் உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் விஜயகாந்தின் எதிர்ப்பை மீறி ஸ்ரீரங்கம் தேர்தலில் பாஜக போட்டியிடுவது என்று உறுதி செய்யப்பட்டது. வேட்பாளர்களாக கட்சியின் மாநிலத்  துணைத்தலைவர் சுப்பிரமணியம் வேட்பாளராக போட்டியிடுவார் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply