10 தொகுதிகளில் பாஜக முன்னிலை: நிராசையான எதிர்க்கட்சிகளின் ஆசை!

10 தொகுதிகளில் பாஜக முன்னிலை: நிராசையான எதிர்க்கட்சிகளின் ஆசை!

கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 3ஆம் தேதி நடந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் 8 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த பாஜக தற்போது 10 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா கட்சி இரண்டு தொகுதிகளிலும் சுயச்சை ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்

இந்த நிலையில் பாஜக குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் தற்போது 10 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து எதுவுமில்லை என்பது உறுதியாகியுள்ளது

8 தொகுதிகளுக்கும் குறைவாக பாஜக பெற்றால் தாங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் மனப்பால் குடித்த நிலையில் அவர்களுடைய ஆசை தற்போது நிராசையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியை இழந்த பாஜகவிற்கு இந்த தேர்தல் முடிவுகள் சற்று ஆறுதலாக இருக்கும் என்பது தெரிந்ததே

Leave a Reply