சட்டசபை தேர்தல்களில் தொடர் வெற்றி எதிரொலி. ராஜ்யசபாவில் பாஜக பலம் பெருக வாய்ப்பு.

modiநரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் நடைபெற்ற மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் அதிகரித்து வருகிறது.

மோடி பதவியேற்ற பின்னர் ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா, கோவா ஆகிய மாநில சட்டசபை தேர்தலில் அதிகப்படியான எம்.எல்.ஏக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளதால் பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கiள் கணிசமானோர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

 ராஜ்யசபா மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்து. இதில் பாஜகவுக்கு தற்போது 45 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் 2016ஆம் ஆண்டு ராஜ்யசபாவின் 70 உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிகின்றது. அந்த இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றால் பாஜக கணிசமான இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

 அதே சமயம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோல்வி அடைந் துள்ள காங்கிரஸ் கட்சிக்கு தற்போதுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை  குறைய வாய்ப்புள்ளது.

Leave a Reply