மாட்டிறைச்சி தொழிலதிபர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டு மாட்டிறைச்சியை தடைசெய்த பாஜக

மாட்டிறைச்சி தொழிலதிபர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டு மாட்டிறைச்சியை தடைசெய்த பாஜக
bjp
பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து சிறுபான்மையோர்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக மாட்டிறைச்சிக்கு பாஜக ஆளும் பல மாநிலங்கள் தடை செய்துள்ளது. இந்நிலையில் மாட்டிறைச்சி வியாபாரிகளிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி மேலிடம் ரூ. 2.5 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றபோது பிரிகிரோபிகோ அல்லானா, பிரிகிரோபிகோ  கன்வென்ரா அல்லானா, இன்டக்ரோ புட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.2 கோடியை தேர்தல் நிதியாக பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது. இந்த 3 நிறுவனங்களும் எருமை மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு  அதிகமாக ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்கள் ஆகும்.

இந்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்பவர்களிடம் நன்கொடை பெற்று கொண்டு மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் பாஜகவின் முரண்பாடான கொள்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

English Summary: BJP got Rs.2.5 crore donation from buffalo meat export companies

Leave a Reply