ஜம்முவில் பாஜக அமைச்சர்கள் திடீர் ராஜினாமா? அமைச்சரவை மாறும் என தகவல்

ஜம்முவில் பாஜக அமைச்சர்கள் திடீர் ராஜினாமா? அமைச்சரவை மாறும் என தகவல்

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசு நடந்து வரும் நிலையில் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாஜக அமைச்சர்களை ராஜினாமா செய்ய பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என கூறப்படுகிறது

ஜம்முவில் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் பாஜக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இது பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. அமைச்சர்களான சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து பா.ஜ.க. அமைச்சர்களையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வருகிற 20-ம் தேதி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply