சண்டையில், ராணுவ வீரர்கள் உயிரிழக்காத நாடு உண்டா?” பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து
நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியை தொடங்கியதில் இருந்தே பாஜக தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வரும் நிலையில் ராணுவத்தில் உள்ளவர்கள், சண்டையின்போது இறக்கத்தான் நேரிடும் என பா.ஜ., – எம்.பி., நேபாள் சிங் கூறியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ஜம்மு – காஷ்மீரில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜம்மு – காஷ்மீர் மாநில, பா.ஜ., – எம்.பி., நேபாள் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ராணுவத்தில் உள்ளவர்கள், தினமும், சண்டையின்போது இறக்கின்றனர். சண்டையில், அவர்கள் இறக்க நேரிடுவது இயல்பான விஷயம். சண்டையில், ராணுவ வீரர்கள் உயிரிழக்காத நாடு உண்டா?” என்று கூறினார்
நேபாள் சிங்கின் இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு வந்ததை அடுத்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.