பரபரப்பான சூழ்நிலையில் ஆளுனரை சந்திக்கும் அண்ணாமலை!

பரபரப்பான சூழ்நிலையில் இன்று தமிழக ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை இன்று காலை 11 மணிக்கு ராஜ்பவனில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.