மத்திய அரசின் புனித நகர பட்டியலில் ஸ்ரீரங்கம். பாஜக தேர்தல் அறிக்கை.

electionஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சார வேலைகளை அனைத்து கட்சிகளும் மிக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இணையாக பாஜகவும் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றது என்பதுதான் இந்த தேர்தலின் முக்கிய அம்சம்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியனுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கும் முக்கிய அம்சங்கள்:

மத்திய அரசின் புனித நகர பட்டியலில் ஸ்ரீரங்கத்தை சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தை சீரமைத்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் துணையோடு அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்ட சிறந்த முன்மாதிரி துணை நகரமாக ஸ்ரீரங்கத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.

திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவாணைக்காவல், கல்லணை பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியான இரணியம்மன் கோவில் அருகில் மேம்பாலம் அல்லது சுரங்க வழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீரங்கத்தில் அரசு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம் அமைக்கப்படும்.

ஸ்ரீரங்கம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் அங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் வழியாக நாட்டின் தொழில் நகரங்கள் மற்றும் புனித தலங்களை இணைக்கும் புதிய ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மணப்பாறை நகரை சுற்றி ரிங் ரோடு அமைக்கப்படும்.

தொடர் விபத்துகள் நிகழும் மரவனூர் பகுதி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

மணப்பாறை, அந்தநல்லூர் பகுதியில் அரசு கல்லூரிகள், தொழிற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மைசூர் பிருந்தாவன் பூங்காவை போன்று முக்கொம்பு மேலணையை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு பல வாக்குறுதிகள் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

Leave a Reply