‘மோடி அலை’யின் காரணமாக இந்த வெற்றி சாத்தியமானதாக பாரதிய ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக 123 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் வெளியே இருந்து ஆதரவு தர தேசியவாத காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது. இருப்பினும் பாஜக சிவசேனாவை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் அமீத் ஷா கருத்து தெரிவித்தபோது, “, 40 இடங்களைக் கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸின் நிபந்தனையற்ற ஆதரவு தருவதை பாஜக தவிர்க்க முன்வரவில்லை. அதேவேளையில், தனது கூட்டணியில் இருந்து பிரிந்து 62 இடங்களைக் கைப்பற்றியுள்ள சிவசேனா கட்சி எங்கள் எதிரிக்கட்சி அல்ல. இருப்பினும் கட்சியின் ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
முன்னணி / வெற்றி நிலவரம்
மகாராஷ்டிரா: (மொத்த இடங்கள் 288)
பாஜக |
123 |
சிவசேனா |
63 |
காங்கிரஸ் |
42 |
தேசியவாத காங்கிரஸ் |
41 |
இதர கட்சிகள் |
19 |
ஹரியாணா: (மொத்த இடங்கள் 90)
பாஜக |
47 |
ஐ.என்.எல்.டி |
20 |
காங்கிரஸ் |
15 |
இதர கட்சிகள் |
8 |