மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக-சரத்குமார் கூட்டணி ஆட்சி: ஏமாந்த சிவசேனா

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக-சரத்குமார் கூட்டணி ஆட்சி: ஏமாந்த சிவசேனா

மகாராஷ்டிரத்தில் நேற்று வரை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் என்றும், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும் அவருடைய மகன் ஆதித்யா தாக்கரே கல்வி அமைச்சராகவும் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது

பாஜகவிடம் 104 எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 54 எம்.எல்.ஏக்களும் இருப்பதால் பெரும்பான்மைக்கு தேவையான 145 எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டணியில் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சர் பதவி கேட்டு அடம்பிடித்த சிவசேனாவுக்கு தற்போது ஒன்றும் இல்லாமல் போனதால் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியில் உள்லனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் அவர்களும், துணை முதல்வராக அஜித் பவார் அவர்களும் பதவியேற்ற சிறிது நேரத்தில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இருவரும் பாடுபடுவர் என நம்புகிறேன்- மோடி

Leave a Reply