கோவா, மணிப்பூரில் ஆட்சி அமைக்கின்றது பாஜக
உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் சாதனை வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் பாரதிய ஜனதா கட்சி, கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் இல்லையெனினும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
மணிப்பூர் முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மனோகர் பாரிக்கர் தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருப்பதால் விரைவில் முதல்வர் பதவியேற்பதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாகவும், விரைவில் ஆதரவு கடிதங்களுடன் ஆட்சி அமைக்க கவர்னரை அணுகவுள்ளதாகவும், மணிப்பூர் மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.