பீகார் தேர்தல் எதிரொலி; மோடி, அமீத்ஷா பதவிகளுக்கு ஆபத்தா?
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலியாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமீத் ஷா மீது சரமாரியாக புகார் கூறி வரும் நிலையில் தற்போது அமீத்ஷா தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கிவிட்டனர். இதே போல் பிரதமரும் பதவி விலக வேண்டி விரைவில் மூத்த தலைவர்கள் வலியுறுத்த நேரம் பார்த்து கொண்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நேற்று பாஜகவின் மூத்த தலைவர் சங்பிரியா கவுதம் என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ” பிகார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடியும் கட்சி தலைவர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும். தலைவர் பதவியில் இருந்து அமித் ஷாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நியமிக்க வேண்டும்.
குஜராத்தில் நடந்து வரும் இடஒதுக்கீடு போராட்டத்தை முதல்வர் ஆனந்திபென் படேலால் சமாளிக்க முடியவில்லை. எனவே, அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு, அமித்ஷாவை புதிய முதல்வராக்க வேண்டும். அதே போல், நிதின் கட்கரியை துணை பிரதமராக்க வேண்டும்’ என்று கூறினார்.
முதலில் அமித்ஷாவையும் அதன்பின்னர் மோடியையும் பதவி விலக வலியுறுத்துவதான் பாஜக மூத்த தலைவர்களின் ஐடியா என பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
English Summary: Modi, Shah should take onus for Bihar poll debacle: Sangh Priya Gautam