மறுமலர்ச்சி பாஜக: தமிழகத்தில் மேலும் ஒரு கட்சி உதயம்.

மறுமலர்ச்சி பாஜக: தமிழகத்தில் மேலும் ஒரு கட்சி உதயம்.

mbjpதமிழகத்தில் பாஜகவுக்கு மிகக்குறைந்த வாக்கு வங்கியே உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதிலும் தமிழகத்தில் பாஜக கட்சியால் ஒரே ஒரு இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. அதேபோல் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் உள்பட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில் தமிழக பாஜகவின் வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தற்போது பாஜக இரண்டாக உடைந்துள்ளது. பாஜகவில் இருந்து பிரிந்து மறுமலர்ச்சி பாஜக என்ற கட்சியை தமிழக பாஜகவின் தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ஜெயகுமார் என்பவர் ஆரம்பித்துள்ளார்.

தனது புதிய கட்சி குறித்து ஜெயகுமார் கூறியதாவது, ‘”தமிழக மக்களின் உணவுக்குத் தகுந்த மாதிரி தமிழக பாஜக செயல்படவில்லை.தமிழகத்தை வழிநடத்தும் செயல்பாடுகள் இல்லை. நம்பி வந்த 50 லட்சம் உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. இதனால் பாஜக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாகவே இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளோம். பாஜகவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எப்போதும் இல்லாத பலம் கிடைத்தது. அதைத் தமிழக தலைமை தக்கவைத்துக்கொள்ளவில்லை.

காவிரி உள்ளிட்ட தமிழக நீர் பங்கீடு விவகாரத்தில் அண்டை மாநிலங்களோடு மத்திய அரசு சார்பில் அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அதே நேரத்தில் உள்ளூர் பகுதிகளில் வீரியமாகச் செயல்படும் வட்டார அளவிலான தலைவர்களை தமிழக பாஜக தலைமை அரவணைத்துச் செயல்படவில்லை.அவர்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மாநில தலைவர்களுக்கு மனநிலை இல்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply