9 மாணவர்கள் உயிரிழக்க காரணமான பாஜக பிரமுகர் நீக்கம்

9 மாணவர்கள் உயிரிழக்க காரணமான பாஜக பிரமுகர் நீக்கம்

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவா்கள் மீது காரை மோதி 9 போ் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பா.ஜ.க. பிரமுகா் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபா்பூா் என்ற மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிப்ரவரி 24ம் தேதி வகுப்புகள் முடிந்து மாணவா்கள் பள்ளியில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தனா். அப்போது அருகே இருந்த பிரதான சாலையில் வேகமாக வந்த கார் பள்ளிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பல மாணவா்கள் காயம் அடைந்தனர்.

உடனடியாக காயம் அடைந்த மாணவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி 9 மாணவர்கள் உயிரிழந்தனர். இன்னும் 20க்கும் மேற்பட்ட மாணவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து காவா்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பள்ளி மாணவா்கள் மீது காரை ஏற்றி 9 மாணவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த பா.ஜ.க. பிரமுகா் மனோஜ் பைதா என்பவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் அவா் 6 ஆண்டுகளுக்கு கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

Leave a Reply