உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு திமுக பலவீனமாக உள்ளது. தமிழிசை சவுந்தர்ராஜன்

tamilsaiதமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அறிவித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று கோவை வந்த தமிழிசை சவுந்தர்ராஜன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது ”பிரதமர் நரேந்திர மோடியின் 100 நாள் ஆட்சியில் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. பணவீக்கம் குறைந்து, பொருளாதாரம் மேம்பட்டு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றை, நூறே நாட்களில் பாரதிய ஜனதா கட்சி செய்திருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான நிலையில் உள்ளது. இந்த சூழலில் நடக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்பது கட்சிக்கு மேலும் பலம் அளிக்க கூடியதாய் இருக்கும். எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் போட்டியிடும் என்று கூறினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு திமுக பலவீனம் அடைந்துள்ளதால்தான் அக்கட்சியின் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளார் என்று அவர் கூறினார்.

Leave a Reply