ரூ.30 கோடியும் அமைச்சர் பதவியும்: காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு வலைவீசிய பாஜக

ரூ.30 கோடியும் அமைச்சர் பதவியும்: காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு வலைவீசிய பாஜக

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஒருவரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக பேரம் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கர் என்பவர் நேற்று கூறியபோது, ‘மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை கலைக்க வேண்டும் என்று பாஜவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சிலர் என்னைத் தொடர்பு கொண்டு பாஜகவில் இணைந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும், ரூ.30 கோடி பணம் தருவதாகவும் பேரம் பேசினர்.

என்னிடம் பாஜகவின் தலைவர்கள் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அவ்வாறு அவர்கள் பேரம் பேசியதை செல்ப்போனில் பதிவு செய்து, அதனை காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அனுப்பியயுள்ளேன். எந்த சூழலிலும் காங்கிரஸை விட்டு செல்ல மாட்டேன், பாஜகவின் சதியையும் உண்மை நிலைமையையும் எடுத்துரைக்கவே விருப்பினேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள பெல்காம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக, காங்கிரஸ், எம்.எல்.ஏ, பேரம், லட்சுமி ஹெப்பாள்கர்

Leave a Reply