ஈரோடு அருகே சாலை விபத்து. பாஜக பிரமுகர் பரிதாப பலி.

accidentகோவை தெற்கு மாவட்ட பாஜகவின் பொது செயலாளராக இருந்த ஜெயராமன்  என்பவர் நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த ஜெயராமன் நேற்று தனது சொந்த வேலை காரணமாக தனக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரில் கோவையில் இருந்து சேலத்துக்கு சென்ரு கொண்டு இருந்தார்.

காலை 9 மணிக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கவுரி தியேட்டர் அருகே காந்தி நகர் பகுதியில் ஒரு வளைவில் அவருடைய கார் வந்த போது திடீரென்று ஈரோட்டை சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்றுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வால்பாறை ஜெயராமன் பலியானார். கார் டிரைவர் படுகாயத்துடன் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பஸ் டிரைவர் மற்றும்,பஸ்சில் பயணம் செய்த ஈரோடு தனியார் கல்லூரியில் படிக்கும் குமாராபாளையத்தை சேர்ந்த மாணவி சசிகலா ஆகியோர்களும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் பலியான வால்பாறை ஜெயராமன் உடலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து குமாராபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply