கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கின்றது பாஜக: முதல்வர் சித்தராமையா தோல்வி முகம்
கர்நாடக மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது.
தபால் வாக்குகள் மற்றும் முதல் ஒரு மணி நேர வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி பின்னர் திடீரென பின்னடைவை சந்தித்தது. பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தனர்.
சற்றுமுன் வெளிவந்த தேர்தல் முடிவுகள் குறித்த தகவலின்படி பாஜக 121 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் மட்டுமே தேவை என்பதால் எந்த கட்சியின் தயவும் இன்றி பாஜக கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கின்றது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்த ஒரே மாநிலமான கர்நாடகமும் கையைவிட்டு சென்றுள்ளதால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, இரண்டு தொகுதிகளில் பின்னடவைவில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.