மம்தா பானர்ஜி தலைக்கு ரூ.11 லட்சம் அறிவித்த பாஜக பிரமுகர் மீது போலீஸ் புகார்

மம்தா பானர்ஜி தலைக்கு ரூ.11 லட்சம் அறிவித்த பாஜக பிரமுகர் மீது போலீஸ் புகார்

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் தருவதாக அறிவித்த பாரதிய ஜனதா யுவ மோர்சா’ அமைப்பின் இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஹனுமன் ஜெயந்தி தினத்தில் மேற்குவங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில், ஹிந்துத்துவா அமைப்புகள் பேரணி நடத்தியது. இந்த பேரணியைக் கலைக்க, மேற்கு வங்க காவல்துறை தடியடி நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா யுவ மோர்சா’ அமைப்பின் இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே கூறியபோது, “மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹிந்துத்துவ அமைப்புகள் நடத்தும் பேரணிகளைத் தடியடி நடத்திக் கலைப்பதையே வாடிக்கையாகக்கொண்டுள்ளது. எனவே மம்தா பானர்ஜியின் தலையைக் கொண்டுவருபவருக்கு, ரூ11 லட்சம் தருகிறேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். யோகேஷ் வர்ஸ்னேவின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, தனக்குப் பயமில்லை என்றும் தன்னை யாரும் பயமுறுத்த முடியாது என்றும், மம்தா பானர்ஜி கூறி இருந்தார். இந்த நிலையில், மஞ்சுஶ்ரீ என்ற திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர், யோகேஷ் வர்ஸ்னே மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். கொல்கத்தாவில் 83-வது வார்டு கவுன்சிலரான மஞ்சுஶ்ரீ, மம்தா பானர்ஜி வசிக்கும் பகுதியில்தான் வசித்துவருகிறார்.

Leave a Reply