ரத்ததானம் கொடுத்தால் சம்பளத்துடன் விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு

ரத்ததானம் கொடுத்தால் சம்பளத்துடன் விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் அவர்களுக்கு ரத்ததானம் கொடுக்கும் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது: ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் (சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள்) தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க மத்திய பணியாளர் நல அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தக் கூறுகளை தானம் அளிக்கும் நாளன்று (ஒருநாள் மட்டும்) ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக இதுபோல் 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள இயலும். இதற்கு தானம் அளித்ததற்கான தகுந்த ஆதாரங்களை இணைப்பது அவசியம்’’.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதோடு ரத்த தானம் கொடுப்பவர்களுக்கு சலுகையும் கிடைப்பதால் ரத்ததானம் இனி அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply